சினிமா

நான் அப்படி நடிக்க மாட்டேன்... எனக்கு அது செட் ஆகாது என சொன்ன கீர்த்தி சுரேஷா இப்படி!! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்...

Summary:

நான் அப்படி நடிக்க மாட்டேன்... எனக்கு அது செட் ஆகாது என சொன்ன கீர்த்தி சுரேஷா இப்படி!! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்...

தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதனைத் தொடர்ந்து அவர் விஜய், விக்ரம், சிவகார்த்திகேயன், சூர்யா, விஷால், தனுஷ் என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்து டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ். நடிகை கீர்த்தி சுரேஷ் கடைசியாக மகேஷ் பாபுக்கு ஜோடியாக சர்க்காரு வாரி பாட்டா என்ற படத்தில் நடித்திருந்தார்.மேலும் தற்போது அவரது கைவசம் ஏராளமான படங்கள் உள்ளன.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது கவர்ச்சியாக இருக்கும் ஷார்ட் உடையில் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.

அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நான் எப்போதும் கவர்ச்சியாக உடை அணிய மாட்டேன், அது எனக்கு செட் ஆகாது என சொல்லி வந்த கீர்த்தி சுரேஷா இப்படி மாறிட்டார் என ஷாக்காகி வருகின்றனர்.


Advertisement