சினிமா

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அடுத்த முல்லை இவர்தான்! சித்ரா இந்த தேதி வரைதான் வருவாரா! தீயாய் பரவும் தகவல்!

Summary:

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் பாரதி கண்ணம்மா காவ்யா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டு குடும்பம், அண்ணன் தம்பி பாசத்தை அடிப்படையாக கொண்டு ஒளிபரப்பாகிவரும் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த தொடரில் ரசிகர்களால் பெருமளவில் கவரப்பட்ட ஜோடி கதிர்- முல்லை ஜோடிதான். இதில் கதிராக குமரனும், முல்லையாக விஜே சித்ராவும் நடித்தனர்.

கதிர்- முல்லை ஜோடிக்காகவே சீரியல் பார்ப்பவர்கள் ஏராளம். இந்த நிலையில் நடிகை சித்ரா கடந்த சில நாட்களுக்கு முன் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த செய்தி ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

pandian stores mullai: இந்த நடிகை தான் இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா?  வைரலாகும் தகவல் - is bharathi kannamma fame kaavya arivumani replacing  chitra as mullai in pandian stores | Samayam Tamil

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர் தொடரில் சித்ரா நடித்த முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது. அப்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் ஆயுத எழுத்து போன்ற சீரியல்களில் நடித்த சரண்யா திரிவேதி நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். 

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சித்ராவை  டிசம்பர் 22ஆம் தேதி வரைதான் காண முடியும் எனவும், பிறகு முல்லை கதாபாத்திரத்தில் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்துவந்த காவ்யா நடிக்கவுள்ளார் எனவும் பாண்டியன் ஸ்டோர்ஸில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமாவின் கணவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Advertisement