ஒரு வருஷமாச்சு! இன்னும் வரலை.. பிக்பாஸ் குறித்து பிரபல தமிழ்நடிகை வெளியிட்ட ஷாக் தகவல்!

ஒரு வருஷமாச்சு! இன்னும் வரலை.. பிக்பாஸ் குறித்து பிரபல தமிழ்நடிகை வெளியிட்ட ஷாக் தகவல்!


actress-kasthuri-tweet-about-bigboss-not-giving-payment

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ்.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை தொடர்ந்து பலரும் பெருமளவில் பிரபலம் அடைந்துள்ளனர். மேலும் சிலர் சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளனர். 

 இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 4 வரும் அக்டோபர் 4-ந்தேதி முதல் ஆரம்பமாகிறது. அதனை நடிகர் கமலே தொகுத்து வழங்க உள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் பரபரப்பு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், கடந்த ஒரு வருடமாகியும் எனக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. விஜய் தொலைக்காட்சிக்கு நன்றி சொல்ல வார்த்தையே இல்லை. நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதே ஆதரவற்ற குழந்தைகளின் ஆபரேஷன் செலவுக்காகத்தான்..  நான் நீங்கள் கொடுத்த எந்த போலியான வாக்குறுதியையும் நம்பவில்லை, ஆனால் இதை நான் எதிர்பார்க்கவும் இல்லை என பதிவிட்டுள்ளார். 

 இதனைக்கண்ட நெட்டிசன்கள் சிலர்  அவருக்கு ஆதரவாகவும், சிலர் இதெல்லாம் வீண் விளம்பரத்திற்காகவா என அவருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தும் வருகிறார்கள்.