சினிமா

யாருமே இல்லாத இடத்தில் நடிகை கஸ்த்தூரி செய்த காரியம்! வைரலாகும் புகைப்படங்கள்!

Summary:

Actress kashthoori travel in chennai metro rail

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருப்பவர் நடிகை கஸ்த்தூரி. அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை பதிவு செய்வதிலும் பிரபலமானார். இந்நிலையில் யாருமே இல்லாத மெட்ரோ ரயிலில் பயணம் செய்து அவர்மட்டும் தனியாக இருக்கும் ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை கஸ்த்தூரி.

முதல்கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை மக்களின் பயன்பாட்டுக்கு 
வந்தது சென்னை மெட்ரோ ரயில். அதன்பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சேவையின் அளவு நீடிக்கப்பட்டு வருகிறது.

சுமார் 23ஆயிரம் கோடி செலவு செய்து முடிக்கப்பட்டது இந்த மெட்ரோ ரயில் திட்டம்.  கட்டணம் அதிகம் என்பதால் ஏழை, எளிய நடுத்தர வர்க்கத்தினர் மெட்ரோ ரயில் பக்கம் செல்வதே இல்லை. இதனால் பெறுமாப்பாண நேரங்களில் ஆளே இல்லாமல் விரிச்சோடி கிடக்கிறது மெட்ரோ ரயில் நிலையங்கள்.

இந்த நிலையில் இன்று நடிகை கஸ்தூரி மெட்ரோ ரயிலில் பயணம் செய்ததாக புகைப்படத்துடன் கூடிய பதிவை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இதில் கொடுமை என்னவெனில் அந்த மெட்ரோ ரயிலில் கஸ்தூரி ஒருவர் மட்டுமே பயணம் செய்தார் என்பதும் அவரை தவிர அந்த ரயிலில் ஒருவர் கூட பயணம் செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.Advertisement