கோலாகலமாக நடந்த நடிகர் கருணாஸின் மகள் திருமணம்.! கியூட்டான புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து கூறிய கென்!!

கோலாகலமாக நடந்த நடிகர் கருணாஸின் மகள் திருமணம்.! கியூட்டான புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து கூறிய கென்!!



actress-karunas-daughter-wedding-photo-viral

தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளிவந்த நந்தா படத்தில் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர் நடிகர் கருணாஸ். அதனைத் தொடர்ந்து அவர் திருடா திருடி, குத்து,புதிய கீதை, பிதாமகன் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து சிறந்த காமெடி நடிகராக வலம் வந்தார்.

மேலும் அவர் ஹீரோவாகவும் அவதாரமெடுத்து திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி, சந்தா மாமா, ரகளபுரம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் அரசியலில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். நடிகர் கருணாஷின் மனைவி கிரேஸ். பின்னணி பாடகியான அவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கலகலப்பாக அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

கருணாஸ்- கிரேஸ் தம்பதியினருக்கு டயானா என்ற மகளும், கென் கருணாஸ் என்ற மகனும் உள்ளனர். கென் கருணாஸ் அழகு குட்டி செல்லம், அசுரன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கருணாஸின் மகள் டயானாவிற்கு சமீபத்தில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.

கென் அந்த திருமண புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, அக்கா மற்றும் மாமாவுக்கு திருமண வாழ்த்துக்கள் எனக் கூறியுள்ளார். அந்தப் புகைப்படம் வைரலான நிலையில் பலரும் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.