"இந்தப் படத்தில் நடித்ததால் கை, கால் உணர்ச்சியில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டேன்!" கல்யாணி ப்ரியதர்ஷன் வேதனை!

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருபவர் கல்யாணி ப்ரியதர்ஷன். இவர் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான ப்ரியதர்ஷனின் மகளாவார். 2017ம் ஆண்டு "வணக்கம்" என்ற தெலுங்குப் படத்தில் தான் முதலில் அறிமுகமானார்.
2019ம் ஆண்டு தமிழில் "ஹீரோ" படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து புத்தம் புது காலை, மாநாடு ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ஜெயம் ரவி ஜோடியாக "ஜீனி" படத்தில் நடித்துவருகிறார். சமீபத்தில் மலையாளத்தில் இவர் நடித்துள்ள "ஆண்டனி" படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தப் படத்தில் அவர் பாக்ஸராக நடித்திருந்தார். இந்தப் படப்பிடிப்பின்போது அவருக்கு காயம் ஏற்பட்டது குறித்து சமீபத்திய பேட்டியில் கல்யாணி கூறியிருந்தார். அவர் கூறியதாவது, "இந்தப் படத்திற்காக மக்கள் எனக்கு கொடுத்து வரும் ஆதரவுக்கு நான் மிகவும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
இந்தப் படத்திற்காக நான் கடுமையாக பாக்சிங் பயிற்சி செய்து வந்தேன். அந்த சமயத்தில் எனக்கு காயம் ஏற்பட்டது. அப்போது என் கை, கால்கள் உணர்ச்சியில்லாதது போல் இருந்தது. காயம் ஏற்பட்டதாக வெளியான தகவல் உண்மைதான்" என்று கல்யாணி ப்ரியதர்ஷன் கூறியுள்ளார்.