சினிமா

என்ன ஒரு குஷி... நடிகை ஜெனிலியாவுடன் பாலிவுட் திரைபிரபலங்கள் போட்ட குத்தாட்ட வீடியோ!

Summary:

நடிகை ஜெனிலியா  மற்றும் பாலிவுட் திரைபிரபலங்கள் தளபதி விஜய் பாடலுக்கு ஆடின டான்ஸ் வீட

நடிகை ஜெனிலியா  மற்றும் பாலிவுட் திரைபிரபலங்கள் தளபதி விஜய் பாடலுக்கு ஆடின டான்ஸ் வீடியோ  இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையை பூர்விகமாக கொண்டவர் ஜெனிலியா. இவர் விஜய், பரத், ஜெயம் ரவி போன்ற அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றவர். அவர் நடித்த சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

பின்னர் அவர் பிரபல பாலிவுட் நடிகர் ரிதேஷ்தேஷ்முக்கை காதலித்து 2012-ல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ரியான், ராஹில் என்ற இருமகன்கள் உள்ளனர்.  தற்போது குடும்ப வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆகு இருக்கும் இவர், தளத்தில் விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு பாலிவுட் திரைபிரபலங்கள் டான்ஸ் ஆடின வீடியோ ஒன்றை ஜெனிலியா இன்ஸ்டாராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement