41 வயதில் திடீரென தலையை மொட்டையடித்துக்கொண்ட பிரபல நடிகை.! வைரலாகும் வீடியோ.!
41 வயதில் திடீரென தலையை மொட்டையடித்துக்கொண்ட பிரபல நடிகை.! வைரலாகும் வீடியோ.!

பிரபல தொலைகாட்சி நடிகை ஜெயா பட்டாச்சார்யா தனது தலையை மொட்டையடித்துக்கொண்டு அந்த புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஹிந்தி தொடர்களில் மிகவும் முக்கியமான நடிகைகளில் ஒருவர் ஜெயா பட்டாச்சார்யா. இவர் நடித்த Kyunki Saas Bhi Kabhi Bahu Thi என்ற தொடர் நல்ல வரவேற்பை பெற்று ஹிந்தி திரையுலகில் இவருக்கு மிகப்பெரிய இடத்தை ஏற்படுத்திக்கொடுத்தது. பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும், ஒருசில படங்களிலும் நடித்துள்ளார் ஜெயா பட்டாச்சார்யா.
பொதுவாக சினிமா நடிகர், நடிகைகள் என்றாலே தங்கள் அழகில் மிகவும் கவனமுடன் இருப்பார்கள். அதிலும் நடிகைகள் பற்றி சொல்லவே தேவை இல்லை. இளம் நடிகையாக இருந்தாலும் சரி, வயதான அனுபவமிக்க நடிகையாக இருந்தாலும் சரி. தங்கள் அழகில் மிகவும் கவனமுடன் இருப்பார்கள்.
இந்நிலையில், பிரபல சீரியல் நடிகையாக இருந்தாலும் உயர்ந்துவரும் வெப்பநிலை காரணமாக தனது கூந்தலை பராமரிக்க முடியவில்லை என தலையை மொட்டை அடித்துள்ளார் ஜெயா பட்டாச்சார்யா. இதுபற்றி கூறியுள்ள அவர், மொட்டை அடிக்கவேண்டும் என்ற ஆசை பலவருடங்களாக இருந்தாலும், எனது குடும்பத்தினர் உட்பட பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மொட்டை அடிக்கவில்லை என கூறியுள்ளார்.
தற்போது மொட்டை அடித்துள்ளது தனக்கு மிகவும் சௌகரியமாக இருப்பதாக கூறும் அவர், புற்றுநோயாளிகளுக்கு தனது முடியை தானமாக கொடுப்பதற்காக அதை பத்திரமாக வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.