சினிமா

நடிகர் ஜி.வி பிரகாஷா இது? ஆளே அடையாளம் தெரியல.. வைரலாகும் செம மாஸ் புகைப்படம்

Summary:

நடிகர் ஜி.வி பிரகாஷ் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளது.

நடிகர் ஜி.வி பிரகாஷ் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளராக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார் ஜி.வி பிரகாஷ். தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் ஹீரோவாக நடித்துள்ள ஜி.வி அடுத்ததாக ஜெயில், 4G , அடங்காதே, ஆயிரம் ஜென்மங்கள் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அதேபோல் சூரரைப்போற்று படத்தில் ஜி.வி பிரகாஷின் இசை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் வெற்றிக்கு ஜி.வியின் இசையும் முக்கிய காரணம் என்றே கூறலாம். இப்படி நடிப்பு, இசை என பயங்கர பிசியாக இருக்கும் ஜி.வி சமூக வலைத்தளங்களிலும் பயங்கர ஆக்டிவாக உள்ளார்.

தனது புது புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிடும் ஜி.வி தற்போது தனது புதிய புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலாக, ஹாலிவுட் நடிகர் போல் இருக்கும் அவரின் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.


Advertisement