50 வயசு ஹீரோவுக்கு 19 வயசில் ஹீரோயினா! என்ன கொடுமை இதெல்லாம்! செம காட்டத்தில் பிரபல நடிகை!

50 வயசு ஹீரோவுக்கு 19 வயசில் ஹீரோயினா! என்ன கொடுமை இதெல்லாம்! செம காட்டத்தில் பிரபல நடிகை!


actress-diya-mirza-talk-about-senior-heroes-pair-with-y

தமிழில் அரவிந்த்சாமி, இஷா கோபிகர் நடிப்பில் வெளிவந்த என் சுவாச காற்றே என்ற  படத்தில் நடித்திருந்தவர் தியா மிர்சா. இவர் பாலிவுட்டில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவர் ஒன் இந்தியா ஸ்டோரீஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் 40 வயது நிறைந்த தியா மிர்சா சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். 

இந்நிலையில் சினிமாக்களில் ஆணாதிக்கம்தான் அதிகம் என பல நடிகைகளும் குற்றம்சாட்டி வரும்நிலையில் தியா மிர்சாவும் இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, சினிமா துறையில் ஆணாதிக்கம் உள்ளது. வயதான நடிகர்கள் 20 வயதுக்கு குறைந்த நடிகைகளுக்கு ஜோடியாக நடிப்பது துரதிர்ஷ்டம். நடிகைகள் விஷயத்தில் இளமைதான் அழகு. 

diya mirza

வயதான நடிகர்களின் கதாபாத்திரங்களை வைத்து கதை எழுதுவதை போல, வயதான நடிகைகளை மனதில் வைத்து, அவர்களுக்கான திரைக்கதைகளை யாரும் எழுதுவதில்லை. ஏராளமான நடுத்தர வயது நடிகைகள் பட வாய்ப்புகள் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர்.

படத்துக்கு படம் இளம் நடிகைகளையே நடிக்க வைக்கிறார்கள். 50 வயதுக்கு மேற்பட்ட நடிகர்கள் கூட 19 வயது நடிகையுடன் ஜோடியாக நடிப்பது ஆச்சரியமாக, வினோதமாக உள்ளது என்று கண்டித்துள்ளார்.