
நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கில், தற்கொலைக்கு முன்பு தனது தாயாருடன் சித்ரா வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகை சித்ரா நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ரா ஜெயா டிவி, சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி என பல்வேறு தொலைக்காட்சிகளில் சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர் ஆவார்.
சித்ராவின் கணவர் ஹேம்நாத் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று சித்ராவிடம் ஏற்கனவே சண்டையிட்டதாக போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இந்தநிலையில், சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் நசரத்பேட்டை போலீசார் கடந்த 3 நாள்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
சம்பவம் நடந்த அன்று படப்பிடிப்புத்தளத்தில் இருந்து ஹோட்டலுக்குச் சென்ற சித்ரா, ஹேம்நாத்தை வெளியே அனுப்பி விட்டு நீண்ட நேரம் அவரது தாயாருடன் செல்போனில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஒருபுறம் கணவரை விட்டுப் பிரிய முடியாமலும், மறுபுறம் தாயின் பேச்சை தட்ட முடியாமலும் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement