சினிமா

திருமணத்திற்கு பிறகு பயங்கர அழகாக மாறிய நடிகை பாவனா! புகைப்படம்!

Summary:

Actress bavana latest photos after her marriage

சித்திரம் பேசுதடி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை பாவனா. முதல் படமே மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார் நடிகை பாவனா. அதனை தொடர்ந்து வெயில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடித்த ஆர்யா என்ற படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து, தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருந்தார் பாவனா. இந்நிலையில் தல அஜித் நடிப்பில் வெளியான அசல் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின்னர் எந்த ஒரு படங்களிலும் பெரிதாக இவரை காண முடியவில்லை.

இந்நிலையில் கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனார் பாவனா. தற்போது முதல் வருட திருமண நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார். தன் கணவருடன் ஜோடியாக அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் டிவிட்டரில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. திருமணத்திற்கு முன்பை விட தற்போது மேலும் அழகாக தோற்றமளிக்கிறார் நடிகை பாவனா. 


Advertisement