சினிமா

ஊரடங்கில் வயலில் இறங்கி விவசாயம் செய்யும் பிரபல நடிகை! வைரலாகும் வீடியோ! பாராட்டி தள்ளும் ரசிகர்கள்!

Summary:

Actress anumol dome field work in lockdown

தமிழ் சினிமாவில் கண்ணுக்குள்ளே, சூரன், திலகர், ஒருநாள் இரவில் உள்பட பல படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை அனுமோல். அவர் மலையாள சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். மேலும் தற்போதும் சில படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் கதகளி மற்றும் பரத நாட்டிய கலைஞரான இவர் அனு யாத்ரா என்ற யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். கேரளா பாலக்காடு அருகே ஒற்றப்பாலம் என்ற ஊரை சேர்ந்த அனுமோல் விவசாயத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவராம். மேலும் படப்பிடிப்புகள் இல்லாதபோது அவர் தனது ஊருக்கு சென்று தங்களது சொந்த நிலத்தில் விவசாய வேலைகள் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கால்  படப்பிடிப்புகள் எதுவுமின்றி வீட்டில் முடங்கியிருக்கும் அனுமோல் தனது வயலில் விதைநெல் தூவும் பணியை செய்துள்ளார். மேலும் விவசாயம் செய்வது எப்படி? விவசாயத்தின் முக்கியத்தும் என்ன என்பதை பற்றியும் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் நெட்டிசன்கள் பலரும் அவருக்கு  வாழ்த்து கூறி வருகின்றனர்.


Advertisement