"தலைக்கனமில்லா மனிதன்" - நடிகர் அஜித் குமாரை நேரில் சந்தித்த விஜய் ரசிகரின் நெகிழ்ச்சி பதிவு; தலையில் தூக்கிவைத்து கொண்டாடும் தல ரசிகர்கள்.!



Actor Vijay Fan Pic with Ajith Kumar 

 

திருநெல்வேலியை சேர்ந்த அருண் குமார், விஜய் ரசிகர் ஆவார். இவர் தற்போது துபாயில் பணியாற்றி வருகிறார். தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் நடிகர் அஜித், பயணங்களின் காதலராக அறியப்படுகிறார். 

படத்தில் நடித்து முடித்த பின்னர் பயணங்கள் மேற்கொள்வது, வெளிநாடுகளில் உள்ள தொழில்நுட்பங்களை புரிந்துகொண்டு இளம் சமுதாயத்திற்கு தொழில்நுட்ப ரீதியாக வழிகாட்டுவது அஜித்தின் செயல்பாடுகள் ஆகும்.

Ajith Kumar

இந்நிலையில், சமீபத்தில் துபாய்க்கு சென்றுள்ள நடிகர் அஜித் குமாரை நேரில் சந்தித்த விஜய் ரசிகர், அஜித்துடன் புகைப்படம் எடுத்து அதனை தனது சமூக பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அந்த பதிவில், "நான் நடிகர் அஜித் குமாரை இன்று துபாயில் சந்தித்தேன். அவரின் குணம் என்னை வியக்க வைத்தது. காதலுக்கான மனிதர் அவர். என்னைப்போல ஒவ்வொரு விஜய் ரசிகரும் அவரின் மனதை புரிந்துகொள்ள வேண்டும். உடலை நல்ல கட்டுக்கோப்புடன் வைத்துள்ளார்" என தெரிவித்துள்ளார்.