இமயமலையில் இயற்கையோடு இயற்கையாக... நிர்வாண புகைப்படங்களை வெளியிட்ட சூர்யாவின் அஞ்சான் பட நடிகர்..!
பிரபல இந்திய திரைப்பட நடிகர் வித்யுத் ஜம்வால். இவர் தற்காப்பு கலைஞரும் ஆவார். இந்திய திரைப்பட நடிகர்களில், தற்காப்பு கலைகள் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 25 நாடுகளுக்கு பயணித்த ஒரே நடிகர் இவர் ஆவார்.
கடந்த 2011ம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான சக்தி திரைப்படம் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமான வித்யுத், பில்லா 2, துப்பாக்கி ஆகிய படங்களில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
Dogla meme 🤡🤡#VidyutJammwal #TriptiDimri pic.twitter.com/OzSfHTiaQo
— Samrat (@samratsp3) December 10, 2023
சூர்யாவுடன் கடந்த 2014ல் அஞ்சான் திரைப்படத்தில், சூர்யாவுக்கு நண்பர் கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பையும் தமிழ் மக்களிடையே பெற்றார். 2020ல் இவரின் நடிப்பில் வெளியான குதா காபிஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து, அப்படத்தின் இரண்டாவது பாகம் 2022ல் வெளியானது.
நடப்பு ஆண்டில் ஐபி 71 படம் மட்டுமே இவரின் நடிப்பில் வெளியாகியுள்ளது. Sher Singh Rana மற்றும் Crakk ஆகிய படங்களின் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று அவருக்கு பிறந்தநாள். தனது 43 வயதில் வித்யுத் அடியெடுத்து வைத்துள்ளார்.

அவரின் பிறந்தநாளை அமைதியாக கழிக்க, இமயமலை பயணம் மேற்கொண்டு இருந்தார். அங்கு இயற்கையுடன் வாழ்ந்து நாட்களை கழித்து வந்த வித்யுத், இயற்கையோடு இயற்கையாக நிர்வாணமாக வாழ்ந்ததாகவும் தெரியவருகிறது. இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது.
Feminism 🤡
— King 👑 (@Kohli_is_God) December 10, 2023
Society 🤡#vidyutjammwal #TriptiiDimri pic.twitter.com/VaPWw8C7Qv
Society 🤡#VidyutJammwal pic.twitter.com/sHJAKtZk3f
— 𝐑𝐚𝐯𝐘 (@Ra__Virat) December 10, 2023