சினிமா

ஐயோ.. கோமா நிலைக்கு சென்ற வாணிராணி சீரியல் நடிகர்! தீவிர சிகிச்சைப் பிரிவில் திடீர் அனுமதி! அவருக்கு என்னதான் நடந்தது??

Summary:

பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பல தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம்

பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பல தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் வேணு அரவிந்த். இவர்  கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ஒளிபரப்பான காதல் பகடை, காசளவு நேசம், காதல் வாங்கி வந்தேன் போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். 

மேலும் அவர் வாழ்க்கை, அலைகள், அக்னி சாட்சி மற்றும் ராதிகா நடிப்பில் வெளிவந்த செல்வி, அரசி, வாணி ராணி, சந்திரகுமாரி போன்ற தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பெருமளவில் ரீச்சானார். இவர் சின்னத்திரை சீரியல்கள் மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இதற்கிடையில் கொரோனா பாதிப்பிற்குள்ளான இவருக்கு பின் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவருக்கு மூளையில் கட்டி இருப்பதாக கூறப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் அதனை அகற்றியுள்ளனர். அதனைத் தொடர்ந்து வேணு அரவிந்த் கோமா நிலைக்கு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் வேணு அரவிந்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வேணு அரவிந்த் குணமடைந்து மீண்டு வரவேண்டும் என ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement