சினிமா

பார்டா.. நடிகர் வையாபுரிக்கு இவ்ளோ பெரிய மகன், மகளா!! எவ்ளோ கியூட்டா இருக்காங்க பாருங்க!!

Summary:

தமிழ் சினிமாவில் ஏராளமான முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமான காமெடி நடிகராக வலம

தமிழ் சினிமாவில் ஏராளமான முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்தவர் வையாபுரி. துவக்கத்தில் சில தொடர்களில் நடித்து வந்த அவர் பின்னர் சினிமாவில் செல்லகண்ணு என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து அவர் விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் வையாபுரி விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் வையாபுரி ஆனந்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஷிவானி என்ற மகளும் ஒரு மகனும் உள்ளனர். வையாபுரி யின் மகள் ஷிவானி சிறுவயதிலிருந்தே ஓவியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். மேலும் அதற்காக அவர் பல கோர்ஸ்களும் செய்துள்ளார்.

இந்நிலையில் வையாபுரி தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட ரசிகர்கள் வையாபுரிக்கு இவ்வளவு பெரிய மகளா, மகன் ஹீரோக்களையே மிஞ்சிவிடுவார் போல என ஆச்சரியம் அடைந்துள்ளனர். 

 


Advertisement