ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
திடீரென தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்த நடிகர் வடிவேலு! ஏன்? என்ன காரணம் தெரியுமா?
நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் மீண்டும் சமீபகாலமாக இரண்டாவது அலையாக பரவத் துவங்கி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. மேலும் இத்தகைய தொற்றுக்கு இளம்வயதினர் முதல் வயதானவர்கள் வரை பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஏராளமான பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் கொரோனோ பரவலை தடுக்க அதிக நிதி தேவைப்படும் நிலையில, தங்களால் இயன்ற நிதியுதவி அளிக்க முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து முதல்வரின் கொரோனா நிவாரணத்திற்காக பொதுமக்கள் தொடங்கி திரைப் பிரபலங்கள், பல்வேறு அமைப்புகள் நிதி அளித்து உதவி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான வடிவேலு தமிழக முதல்வரை சந்தித்து ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகமே உற்றுப்பார்க்கும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார். ஒவ்வொரு திட்டங்களையும் சிறப்பாக நிறைவேற்றி தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடைபெற்று வருகிறது எனக் கூறியுள்ளார். மேலும் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.