சினிமா

நீளமான முடி! லேசான தாடி! ஆளே மாறிப்போன நடிகர் சூர்யா! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.

Summary:

நடிகர் சூர்யாவின் மிகவும் வித்தியாசமான கெட்டப் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

நடிகர் சூர்யாவின் மிகவும் வித்தியாசமான கெட்டப் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

சூர்யா அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்க இருக்கும் வாடிவாசல் என்ற படத்திற்காக தயாராகிவருகிறார். படம் முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டை மையமாக கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சூர்யா மற்றும் வெற்றிமாறனின் கூட்டணியும் ரசிகர்கள் மத்தியில் மேலும் ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நடிகர் சூர்யாவின் 45 வது பிறந்தநாள் முன்னிட்டு வாடிவாசல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு இருந்தது. அதில் சூர்யா மிகவும் கம்பீரமாக, கடினமாக இருக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் நடிகர் சூர்யா புது கெட்டப் ஒன்றில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

நீளமான முடி, லேசான தாடியுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது வாடிவாசல் படத்திற்கான புது கெட்டப் என அந்த புகைப்படத்தை ட்ரெண்ட் செய்ய தொடங்கியுள்ளனர். மேலும் இதுவரை இல்லாத வகையில் சூர்யாவின் அந்த புது தோற்றமும் சற்று வித்தியாசமாகவே உள்ளது.


Advertisement