நடிகர் சூர்யாவை மேடையிலேயே கண்ணீர் விட்டு அழவைத்த ஏழை மாணவி! அனைவரையும் பதறவைத்த வீடியோ!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது அப்பா நடிகர் சிவகுமார் போலவே இவரும் நல்ல பழக்கவழக்கங்களை கொண்டவர் ஆவார். நடிகர் சூர்யா நடிப்பைத் தாண்டி விவசாயிகளுக்கு உதவுவது, கல்வி கற்க முடியாத சூழ்நிலையில் இருக்கும் மாணவர்களை அகரம் அறக்கட்டளை மூலம் அடையாளம் கண்டு அவர்களை படிக்க வைப்பது போன்ற சமூக தொண்டுகளை செய்து வருகிறார் நடிகர் சூர்யா.
இந்நிலையில், அகரம் அறக்கட்டளை சார்பில் இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் அகரம் அறக்கட்டளை நிறுவனரும் நடிகருமான சூர்யா, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த புத்தக வெளியீட்டு விழாவில் அகரம் அறக்கட்டளை மூலம் கல்வி பயிலும் மாணவி ஒருவர் பேசினார். அதில் அவர் தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த பல கஷ்டங்களையும், சோகமான சம்பவங்களையும், குடும்ப சூழ்நிலையும் குறித்து அனைவரின் மனதை உருக்கும் அளவிற்குப் பேசினார்.
அந்த மாணவியின் பேச்சை கேட்ட நடிகர் சூர்யா மேடையில் கண் கலங்கினார். பின்னர் அந்த மாணவியை தட்டி கொடுத்து ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் வந்திருந்த பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.