தமிழகம் சினிமா வீடியோ

திருந்தமாட்டார்களா இவர்கள்! மீண்டும் வெறுப்பான சிவக்குமாரின் வீடியோ!

Summary:

Actor sivakumar again breaks mobile while selfie

சில நாட்களுக்கு முன்பு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்ட தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்பு விழாவிற்கு சென்ற நடிகர் சிவக்குமாருடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை சிவக்குமார் தட்டிவிட்டார். 

அது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. அதன் பின் சிவக்குமார் அப்படி நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்டார். மேலும் அந்த இளைஞருக்கு புதிய செல்போன் வாங்கி கொடுத்ததாகவும் செய்திகள் வந்தன. 

இந்நிலையில் மீண்டும் அதே போன்ற செயலை செய்துள்ளார் நடிகர் சிவக்குமார். சென்னையில் எழுத்தாளர் ஒருவரது வீட்டு திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த சிவக்குமார் செல்பி எடுத்தவரின் செல்போனை தட்டிவிட்டுள்ளார். 

இப்போது இந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த பலரும் சிவக்குமாரை சராமாரியக வார்த்தைகளால் தாக்கி வருகின்றனர். மேலும் அவர் தான் ஏற்கனவே செல்பி எடுக்கும் போது தட்டிவிட்டாரே, திரும்பவும் ரசிகர்கள் ஏன் இப்படி செய்ய வேண்டும் என்றும் சிலர் ஆதரவாக பேசி வருகின்றனர்.


Advertisement