நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு அடுத்தபடியாக பேசப்படுபவர் நடிகர் சிவா கார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியான அணைத்து திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டர் சிவா.
இந்நிலையில் சில நாடுகளுக்கு முன்பு இவர் நடிப்பில் வெளியான சீமராஜா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அவரது படங்களிலேயே இந்த படம்தான் வசூல் குறைவு என பல திரையரங்க உரிமையாளர்கள் கூறி வருகின்றனர்.
அடுத்தது சிவா யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடையே காணப்படும் நிலையில் ரவிக்குமார், ராஜேஷ் படங்களுக்கு பிறகு இரும்புத்திரை பட புகழ் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம் சிவா. இந்த படத்தை 24 AM ஸ்டுடியோஸ் தான் தயாரிக்க இருக்கிறார்களாம்.
விரைவில் படத்தை பற்றிய சில முக்கிய விஷயங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.