சினிமா

கு-------ணி ஆனார் நடிகை சமந்தா. காரணம் யார் தெரியுமா?

Summary:

Actor siva gave new pet name to actress samantha

பானா காத்தாடி திரைப்டம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்று பல இளைஞர்களின் கனவு கன்னியாக திகள்பவர் நடிகை சமந்தா. முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பட வாய்ப்புகள் குவிந்தன.

விஜய், சூர்யா, விக்ரம் என தமிழின் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்த சமந்தா சில மாதங்களுக்கு முன்பு நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிக்கும் சமந்தா சிவா கார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமராஜா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் எதிர்பார்த்த அளவு ஓடாவிட்டாலும் கலவையான விமர்சங்கங்களை பெற்றது. இந்நிலையில் சீமராஜா படத்தில் நடிகை சமந்தாவுக்கு சிவகார்த்திகேயன்  “குந்தாணி” என்ற பட்டப்பெயர் வைத்து தான் அழைப்பார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டிலும் சிவகார்த்திகேயன் சமந்தாவை “குந்தாணி” என்றுதான் கூப்பிடுவாராம். இந்த பட்டபெயரானது சமந்தாவை பற்றி பேசும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பயன்படுத்தப்பட்டு பிரபலமாகி வருகிறது.


Advertisement