சினிமா

சிம்புவின் வாய்ப்பை தட்டி பறித்த பிரபல தமிழ் நடிகர்! எந்த படம் தெரியுமா?

Summary:

Actor simbu missed a chance and jeeva got it

சர்ச்சை என்றாலே தமிழ் சினிமாவில் சிம்புதான் என்றாகிவிட்டது. ஆனால் தனக்கு வரும் சர்ச்சைகளையும், எதிர்ப்புகளையும் மீறி வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறார் நடிகர் சிம்பு. தற்போது இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வந்தால் ராஜாவாகத்தான் வருவேன் என்ற படத்தில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் இந்த படத்திற்கு முன்பு சிம்பு, விஜய் சேதுபதியை வைத்து றெக்க படத்தை இயக்கிய ரத்தின சிவா இயக்கத்தில் நடிக்க இருந்தாராம். படத்தின் கதை சிம்புக்கு மிகவும் பிடித்துள்ளது.

இப்போது இந்த படத்தின் வாய்ப்பு நடிகர் ஜீவாவுக்கு சென்றுள்ளது. அவரும் ஓகே சொல்லியுள்ளார். இதனால் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஹீரோயினாக மும்பை அழகி ஒருவர் நடிக்க இருக்கிறாராம்.


Advertisement