நடிகர் சத்யராஜின் தாயார் காலமானார்.!Actor sathyaraj mother death

நடிகர் சத்யராஜின் தாயார் வயது மூப்பின் காரணமாக காலமானார்.

தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் அறிமுகமாகி ஹீரோவாக உயர்ந்த தனக்கென தனி இடத்தை உருவாக்கியவர் சத்யராஜ். 90கள் காலம் முதல் தற்போது வரை 45 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக உள்ளார்.

Sathyaraj mother

இவர் நடிக்கும் திரைப்படங்களில் ஹீரோ, வில்லன், காமெடி என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதை வென்றவர். சிறு கதாபாத்திரம் என்றாலும் அதனை சிறப்பாக நடிக்க கூடியவர்.

Sathyaraj mother

இந்த நிலையில் நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார். நடிகர் சத்யராஜின் தாயார் மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.