இவ்ளோ நாள் சிரிச்சோம், முதன்முறையா அழுகையுடன்.. நடிகர் சதீஷ் வெளியிட்ட வீடியோ! கண்கலங்கும் ரசிகர்கள்!!

இவ்ளோ நாள் சிரிச்சோம், முதன்முறையா அழுகையுடன்.. நடிகர் சதீஷ் வெளியிட்ட வீடியோ! கண்கலங்கும் ரசிகர்கள்!!


actor-sathish-shares-video-about-vivek

தமிழ் சினிமாவில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகராக விளங்கிய விவேக் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , சிகிச்சை பலனின்றி கடந்த 17ம் தேதி காலை உயிரிழந்தார். இவரது இந்த திடீர் மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் அவருடனான தங்களது நினைவுகளையும், அரிய புகைப்படங்களையும் தேடி எடுத்து பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் காமெடி நடிகர் சதீஷும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நகைச்சுவை நடிகர் சதீஷ், நடிகர் விவேக், மயில்சாமி, செல் முருகன் உள்ளிட்டோர் உள்ளனர். மேலும் அதில் நடிகர் மயில்சாமி இன்ஸ்பெக்சன் என்கிற வசனத்தை சொல்வதற்கு சிரமப்பட, விவேக் அதற்கு உதவி செய்கிறார்.

இந்த நிலையில் அந்த வீடியோவை பகிர்ந்த சதீஷ், உங்களைப் பார்க்கும்போதெல்லாம் இந்த வீடியோவை பார்த்து சிரிப்போம். முதன்முறையாக அழுகையுடன் மிஸ் யூ விவேக் சார் என பதிவிட்டுள்ளார்.