காமெடி சூப்பர்ஸ்டார், நட்சத்திர நாயகன் சந்தானத்துக்கு இன்னைக்கி ஹேப்பி பர்த்டே..!

காமெடி சூப்பர்ஸ்டார், நட்சத்திர நாயகன் சந்தானத்துக்கு இன்னைக்கி ஹேப்பி பர்த்டே..!


Actor Santhanam Birthday Today

சின்னத்திரையில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் அறிமுகமாகி, பின்னாளில் தனது உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் திரைஉலகுக்குள் காலடி வைத்தவர் நடிகர் சந்தானம். தனது இளம் வயதில் இருந்து நகைச்சுவை ஆற்றலை கொண்டிருந்த சந்தானம் திரையுலகில் காலடி எடுத்துவைக்க உதவியாக இருந்தது விஜய் தொலைக்காட்சியின் லொள்ளு சபா நிகழ்ச்சி. 

Santhanam

அதனால் தான் அந்த நிகழ்ச்சியில் தன்னுடன் பயணித்த தனது நண்பர்களை இன்றளவும் படங்களில் நடிக்க வாய்ப்பளித்து வாழவைத்து வருகிறார். காமெடியில் நடிகர் கவுண்டமணிக்கு அடுத்த இடத்தை அவரின் பாணியிலேயே பிடித்த நடிகர் சந்தானம், பல நட்சத்திரங்களின் படத்திற்கு உறுதுணையாக இருந்து வந்தார். 

Santhanam

படத்தில் சந்தானம் நடித்தால் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்று கூறியே பலரும் திரைப்படங்களுக்கு செல்லும் காலம் வந்தது. அந்த அளவுக்கு தனது தார்மீக உழைப்பை சந்தானம் திரையுலகத்தில் செயல்படுத்தி இருந்தார். பின்னாளில் கதாநாயகனாக உருவெடுத்த சந்தானம் தற்போது வரை 15 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஜனவரி 21 ஆம் தேதியான இன்று அவருக்கு பிறந்தநாள்.