அதற்கு அளவு கேட்ட முதல் நபர் நடிகர் விஜய்தான்! நண்பர் சஞ்சீவ் பேட்டி!



actor-sanjeev-shared-interesting-matters-about-vijay

தமிழ் சினிமாவின் தளபதி விஜய். தளபதி ரசிகர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு, மலையாளம் என இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். நாளைய தீர்ப்பு என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தளபதி இன்று சர்க்கார் அமைக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.

தற்போது அட்லீயுடன் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள தளபதி தனது அடுத்த படத்தில் பிசியாக நடித்துவருகிறார். விஜய்யின் நண்பர்களில் ஒருவர் பிரபல சீரியல் நடிகர் சஞ்சீவ். இவர் தளபதியுடன் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். விஜய், சஞ்சீவ் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்தது.

vijay

இந்நிலையில் தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சஞ்சீவ், விஜய்யுடன் நடந்த சுவாரசிய அனுபவம் பற்றி கூறியுள்ளார். விஜய் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு. பதில் நடித்தற்காக அவரது அப்பா சந்திரசேகர் விஜய்க்கு சம்பளம் வழங்கியுள்ளார். தனது முதல் சம்பளத்தில் தனது அம்மாவிற்கு ஏதாவது வாங்க ஆசைப்பட்ட விஜய், தனது அம்மாவிற்கு போன் செய்து உங்கள் புடவை என்ன அளவு என்று கேட்டுள்ளார்.

புடவைக்கு அளவு கேட்ட முதல் நபர் விஜய்தான் என நகைச்சுவையாகா பதில் அழைத்தார் நடிகர் சஞ்சீவ்.