"அஜித் ஒரு நல்ல மனிதர்" மனம் திறந்த பிரபல நடிகர்.. ஆச்சரியத்தில் அஜித் ரசிகர்கள்.!
"அஜித் ஒரு நல்ல மனிதர்" மனம் திறந்த பிரபல நடிகர்.. ஆச்சரியத்தில் அஜித் ரசிகர்கள்.!

2005ம் ஆண்டு "கனா கண்டேன்" திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பிரித்விராஜ் சுகுமாரன். அடிப்படையில் மலையாள நடிகரான இவர், மலையாளத்தில் "நந்தனம்" திரைப்படம் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து தமிழில் பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, அபியும் நானும் போன்ற பல நல்ல படங்களில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். மேலும் பிரித்விராஜ் இயக்குனர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் அஜித்தைப் பற்றி பிரித்விராஜ் சுகுமாரன் ஒரு பேட்டியில் பேசியிருப்பது கவனத்தைக் கவர்ந்துள்ளது. அந்தப் பேட்டியில், " நடிகர் சூர்யாவின் புது வீடு கிரகப்பிரவேசம் நிகழ்ச்சியில் நடிகர் அஜித்தை நேரில் மிக நெருக்கமாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அப்போது அஜித் என்னிடம், தான் பெரிய நடிகன் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் என்னிடம் மிகவும் சாதாரணமாக பேசினார். அவரிடம் இருந்து பல நல்ல விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன். மிக நல்ல மனிதர் அஜித்" என்று பிரித்விராஜ் சுகுமாரன் கூறியுள்ளார்.