சினிமா Covid-19

பிரபல நடிகர் பிரித்விராஜுக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்.

Summary:

பிரபல நடிகர் ப்ரிதிவிராஜுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவர் தனது டிவிட்டர் பக்கம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். 

பிரபல நடிகர் ப்ரிதிவிராஜுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவர் தனது டிவிட்டர் பக்கம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். 

தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிரிதிவிராஜ். கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் மலையாள சினிமாவிலும் முன்னணி நடிகர் மற்றும் இயக்குனராக வலம்வருகிறார். நடிப்பில் மட்டும் கவனம் செலுத்திவந்த இவர் கடந்த ஆண்டு வெளியான லூசிபர் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார்.

இப்படி பன்முகத்தன்மையுடன் இருக்கும் இவர் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அக்டோபர் 7 ஆம் தேதி முதல் ஜன கன மன படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுவருவதாகவும், படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் அனைத்து விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன்தான் அனைவரும் கலந்துகொள்கின்றனர் எனவும், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டோம், அதேபோல் படப்பிடிப்பு முடிந்த பிறகும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டோம். படப்பிடிப்பின் இறுதி நாளன்று செய்துகொண்ட பரிசோதனையில் தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தான் நலமுடன் இருப்பதாகவும், தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாகவும் தெரிவித்துள்ள அவர், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்வதாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்".


Advertisement