புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
அடேங்கப்பா.. நடிகர் பிரபுதேவாவுக்கு இவ்ளோ பெரிய மகனா.! அப்பாவுடன் எங்கு சென்றுள்ளார் பார்த்தீர்களா!!
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடன இயக்குனராகவும், முன்னணி நடிகராகவும் திகழ்ந்து ரசிகர்களை கவர்ந்தவர் பிரபுதேவா. இவரது நடன திறமைக்கென லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவரை இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்கள் அழைத்து வந்தனர். மேலும் பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த மை டியர் பூதம் திரைப்படம் குழந்தைகளை நன்கு கவர்ந்தது. அவரது கைவசம் தற்போது வினோதன், முசாசி, எங் மங் சங் போன்ற பல படங்கள் உள்ளன. இவர் ராம்லதா என்பவரை கடந்த 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 3 மகன்கள் இருந்தனர்.
இந்நிலையில் மூத்த மகன் அவனது 12 வயதில் காலமானார். மேலும் நடிகர் பிரபுதேவா அவரது மனைவியை விவாகரத்து செய்தார். இரண்டாவது திருமணமும் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் நடிகர் பிரபுதேவா அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் மேட்ச்சை பார்ப்பதற்காக தனது மகனுடன் சென்றுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் பிரபுதேவாவின் மகன் நன்கு வளர்ந்துவிட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.