மீண்டும் தீவிரமாகும் கொரோனா பாதிப்பு! பிரபல காமெடி நடிகருக்கு தொற்று உறுதி! ஷாக்கான ரசிகர்கள்!!actor-pakroo-tested-corono-positive-JZ4LUY

நாடு முழுவதும் கொரோனா பரவல் ஓரளவுக்கு குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அசுர வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் ஒரு நாளைக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் பல திரைப்பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் காமெடி நடிகர் பக்ருவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். தமிழில் அற்புத தீவு, டிஷ்யூம், ஏழாம் அறிவு என ஏராளமான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பக்ரு. இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு சமீபத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.

corono

 அதில் அவருக்கு கொரனோ பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். சிகிச்சைக்கு பிறகு தற்போது ஓரளவுக்கு உடல்நலம் தேறிய நிலையில் அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதுகுறித்து இணையத்தில் பகிர்ந்த அவர் அனைவரையும் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.