பிரபல காமெடி நடிகருக்கு இப்படியொரு சோதனையா? வேதனையுடன் அவரே கூறிய அதிர்ச்சி தகவல்!!



actor muthukalai says the shock news

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் காமெடி நடிகராக வலம் வந்தவர் முத்துக்காளை. இவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் இறந்துவிட்டதாக சமீப காலமாக வதந்திகள் பரவிக்கொண்டுள்ளது.

இந்நிலையில் ஜிஜி மற்றும் கமலி நடிப்பில் நேசமானவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வாங்க படம் பார்க்கலாம்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. 

muthukalai

இதில் கலந்து கொண்ட காமெடி நடிகர் முத்துக்காளை பேசுகையில் கூறியதாவது, யூடியூப் சேனல்களில் நான் இறந்துபோய் 2 வாரம் ஆகிவிட்டதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது. ஆனால் நான் உயிரோடு தான் இருக்கிறேன். நல்ல ஆரோக்கியமாக இருக்கிறேன்.

படப்பிடிப்புகளுக்கு செல்வதைவிட, இதுகுறித்து விசாரித்து தினமும் வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு நான் உயிரோடு இருக்கிறேன் என பதில் சொல்வதுதான் பெரிய வேலையாக இருக்கிறது” என வேதனையுடன் குறிப்பிட்டார்.