தமிழகம் சினிமா

மாதவன் நடிக்கும் படத்தில் இயக்குனராகவும் புதிய அவதாரம்; ரசிகர்கள் கூடுதல் உற்சாகம்.!

Summary:

actor mathevan new flim rocketry and direction

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் அலைபாயுதே திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகர் மாதவன். அதை தொடர்ந்து இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் மின்னலே திரைப்படம் மூலம் அனைத்து பெண்கள் மனதிலும் இடம் பிடித்தார். இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானியாக நடிகர் மாதவன் நடிக்க உள்ளார்.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு இத்திரைபடம் உருவாக்கபட உள்ளது. இத்திரைப்படத்தில் நடிகர் மாதவன் நம்பி நாராயணனாக நடிக்கவுள்ளார்.

"அக்ஸர் மற்றும் தில் மாங்கே மோர்" போன்ற வெற்றி படங்களை இயக்கிய ஆனந்த மஹாதேவன் இத்திரைப்படத்தை  இயக்க உள்ளார் என  செய்திகள் வெளி வந்தது.

இந்நிலையில் ஒருசில காரணங்களால் இயக்குநர் பொறுப்பிலிருந்து ஆனந்த் மகாதேவன் தற்போது விலகியுள்ளார். அதனைத் தொடர்ந்து படத்தின் முழு இயக்குநர் பொறுப்பையும் மாதவனே ஏற்றுக் கொண்டுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் உறுதிப்படுத்தினார். 

இந்நிலையில், நடிகர் மாதவன் ‘ராக்கெட்டரி’ படத்திற்கு லோகேஷனை தேர்வு செய்ய ஜியார்ஜியா சென்றுள்ளார். அங்கியிருந்து வீடியோ பதிவிட்ட அவர், தற்போது ஜியார்ஜியாவில் மைனஸ் 6 டிகிரி தட்பவெட்ப நிலை இருப்பதாகவும், ‘ராக்கெட்டரி’ படத்திற்கான அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இங்கு தான் நடைபெறவுள்ளதாகவும் மாதவன் கூறியுள்ளார்.


Advertisement