சினிமா

இவர்தான்யா ஹீரோ! தனது தந்தை பிறந்தநாளில் நடிகர் மகேஷ்பாபு செய்த மிக முக்கியமான அசத்தல் காரியம்!

Summary:

தெலுங்கு சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் மகேஷ்பாபு

தெலுங்கு சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் மகேஷ்பாபு. இவருக்கு தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் மகேஷ்பாபு திரைப்படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு இருக்கும். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு பிரபல தெலுங்கு நடிகரும், மகேஷ்பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா தனது 78வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

பொதுவாகவே ஒவ்வொரு ஆண்டும் இவரது பிறந்த நாளில் மகேஷ்பாபு நடித்த படங்களின் போஸ்டர், டிரைலர்கள் வெளியாவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா இரண்டாவது அலையாக பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் கொண்டாட்டங்கள் அனைத்தும் தவிர்க்கப்பட்டுள்ளது.

 ஆனால் தனது தந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் மகேஷ் பாபு ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்திலுள்ள புர்ரிபாலம் கிராம மக்கள் அனைவருக்கும  தனது சொந்த செலவில்  மருத்துவமனைகளுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி வழங்கியுள்ளார். மேலும் கிராம மக்களும் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இதனை  மகேஷ்பாபு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் அது தற்போது வைரலாகி பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். மேலும் இதுமட்டுமின்றி மகேஷ்பாபு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறாராம்.


Advertisement--!>