சினிமா

புளியமரத்தில் தொங்கிய நடிகர் கார்த்தி.. என்னனு கேட்டால் இதுதான் காரணமாம்.. வைரல் புகைப்படம்..

Summary:

நடிகர் கார்த்தி புளியமரத்தில் தொங்கிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

நடிகர் கார்த்தி புளியமரத்தில் தொங்கிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சுல்தான் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இதனை தொடர்ந்து பிரபுதேவா இயக்கத்தில் கருப்புராஜா வெள்ளைராஜா என்ற படத்திலும் இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் பார்ட்டி என்ற படத்திலும் நடுத்துவருகிறார் கார்த்தி. இந்நிலையில் நடிகர் கார்த்தி புளியமரத்தில் தொங்கி விளையாடுவது போன்ற ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

அந்த பதிவில், "சிறு வயதில் ஏறமுயன்ற புளியமரம். இறுதியாக நான் அதைச் செய்து விட்டேன்" எனவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள், இந்த வயதில் உங்களுக்கு இப்படி ஒரு ஆசையா என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement