ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
ரீ என்ட்ரீயில் கலக்க போகிறாரா ஜித்தன் ரமேஷ்.. ரசிகர்கள் ஆச்சரியம்.!
தமிழ் சினிமாவில் நடிகரும், தயாரிப்பாளருமாக இருந்து வருபவர் ஜித்தன் ரமேஷ். 2005 ஆம் ஆண்டு வெளியான 'ஜித்தன்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகராக அறிமுகமானார். இப்படம் ஒரு அளவிற்கு வெற்றி பெற்று ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.
இப்படத்திற்கு பின்பு ஜித்தன் ரமேஷ் என்று அழைக்கப்பட்டு வந்த இவர் இதனைத் தொடர்ந்து மது, நீ வேணும்டா செல்லம் போன்ற ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனால் அப்படங்கள் வெற்றி பெறவில்லை என்பதால் தமிழ் சினிமாவில் இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஜித்தன் ரமேஷ், தற்போது 'ரூட் நம்பர் 17' எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் மூன்று கெட்டப்களில் நடித்துள்ளர்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் என்று வெளியானது. இந்த போஸ்டரில் ஜித்தன் ரமேஷை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் கமென்ட் செய்து வருகின்றனர். மேலும் இப்படத்திற்கு பிறகு ஜித்தன் ரமேஷ் சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கருதி வருகின்றனர்.