சினிமா

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர் ரஹ்மானை இழிவுபடுத்திய பிரபல முன்னணி நடிகர்! என்ன சொல்லிட்டார் பார்த்தீர்களா! வீடியோ இதோ!!

Summary:

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பாலகி

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பாலகிருஷ்ணா. இவர் அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்துவார். இந்த நிலையில் அவர் தற்போது ஏ.ஆர் ரகுமான் மற்றும் பாரத ரத்னா விருதை இழிவுபடுத்தும் வகையில் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தனியார் தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகர் பாலகிருஷ்ணன் ஏ.ஆர்.ரஹ்மான் என அழைக்கப்படும் ஒருவர் ஆஸ்கார் விருதை வென்றவர் என்று கேள்விப்பட்டிருக்கேன். ஆனால் அவர் யார் என்று கூட எனக்கு தெரியாது. மேலும் பாரத ரத்னா விருது என்.டி.ஆரின் கால் விரல் நகத்திற்கு சமம் என்பது போல பேசியுள்ளார்.

மேலும் அவர் எந்தவொரு உயரிய விருதும் என்னுடைய குடும்பம் தெலுங்கு திரையுலகிற்கு செய்த நன்மைக்கு ஈடாகாது என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனை கண்டு ரசிகர்கள் பாலகிருஷ்ணாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement