கோலாகலமாக நடைபெற்ற நடிகர் அசோக் செல்வனின் திருமணம்... வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம்!!

கோலாகலமாக நடைபெற்ற நடிகர் அசோக் செல்வனின் திருமணம்... வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம்!!


Actor Ashok Selvan marriage photos viral

தமிழில் சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அசோக் செல்வன். அதனைத் தொடர்ந்து ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வாரம், தெகிடி போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான போர் தொழில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதுடன், வசூல் சாதனையும் படைத்துள்ளது.

இந்நிலையில் தும்பா, அன்பிற்கினியால் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவரும் நடிகர் அருண் பாண்டியனின் மகளும் ஆன கீர்த்தி பாண்டியனை நடிகர் அசோக் செல்வன் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளார். தற்போது இவர்களின் காதலுக்கு இரு விட்டாரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து கடந்த சில மாதங்களாக முன்பு இவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

Actor Ashok Selvan

இந்நிலையில், இவர்களின் திருமணம் இன்று பாளையங்கோட்டை அருகே உள்ள இட்டேரியில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியானது சென்னையில் பிரமாண்டமாக நடைப்பெற உள்ளது.