நடிகர் மனோஜின் மனைவியும் ஹீரோயினா?? அவரோட அழகான குடும்பத்தை பார்த்தீங்களா!!
எனக்கு அவரோட நடிக்கதான் ஆசை! அடுத்த குறிவைத்த அண்ணாத்த வில்லன் நடிகர்!! அட.. யாரைனு பார்த்தீங்களா!!

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த. இத்திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் தங்கையாக கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் அவர்களுடன்
குஷ்பு, மீனா, சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்
அண்ணாத்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த நவம்பர் 14 ஆம் தேதி வெளியானது. மேலும் இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தையே பெற்றது. இந்தப்படத்தில் வில்லனாக நடிகர் அபிமன்யூ சிங் நடித்திருந்தார். அவர் இதற்கு முன்பு விஜய்யுடன் தலைவா, சூர்யாவுடன் ரத்த சரித்திரம், கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் அபிமன்யூ சிங்கிடம் அண்ணாத்த படம் குறித்து கேட்டபோது அவர், அண்ணாத்த விமர்சகர்களுக்காக எடுக்கப்பட்டது கிடையாது. சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டது என கூறியுள்ளார். மேலும் அவர் தமிழ் சினிமாவில் தல அஜித்துடன் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார்.