லியோ திரைப்படத்தில் நடிக்க அடுத்தடுத்த கண்டிஷன்களை போட்டு வரும் அர்ஜுன்.. என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சியில் லோகேஷ் கனகராஜ்.?

லியோ திரைப்படத்தில் நடிக்க அடுத்தடுத்த கண்டிஷன்களை போட்டு வரும் அர்ஜுன்.. என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சியில் லோகேஷ் கனகராஜ்.?


Actionking arjun continuesly giving condition for acting leo movie

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் முதன் முதலில் 'மாநகரம்' எனும் திரைப்படத்தை இயக்கி தமிழில் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் பெரிதளவில் இவருக்கு கை கொடுக்கவில்லை.

Arjun

இப்படத்திற்குப் பிறகு எந்தத் திரைப்படங்களிலும் கமிட்டாகாமல் இருந்த லோகேஷ் கனகராஜ், 2019 ஆம் வருடம் கார்த்தி கதாநாயகனாக நடித்து வெளியான 'கைதி' திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் வெற்றியை தொடர்ந்து விஜய் நடிப்பில் 'மாஸ்டர்' திரைப்படத்தை இயக்கி வெற்றி இயக்குனராக வலம் வந்தார் லோகேஷ் கனகராஜ்.

இதையடுத்து கமலஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மிகப்பெரிய வெற்றியானது. இவ்வாறு தொடர்ந்து வெற்றி படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்து வரும் லோகேஷ் கனகராஜ், தற்போது மீண்டும் விஜய் நடிப்பில் 'லியோ' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

Arjun

லியோ திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அர்ஜுன், 'லியோ' படத்தில் நடிப்பதற்கு பல கண்டிஷன்களை அடுத்தடுத்து கூறிக்கொண்டே இருக்கிறாராம். வில்லனாக நடித்தால் ஹீரோவிற்கு சமமான அளவிற்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்றும், அடி வாங்குவதுபோல் காட்சி இருக்கக் கூடாது என்றும் கூறியிருக்கிறாராம். இதனை ஒத்துக்கொண்டு லோகேஷ் கனகராஜ் 'லியோ' திரைப்படத்தை இயக்கியிருக்கிறாராம். இந்த தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு இப்படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது.