தற்கொலை செய்து கொள்வேன் என்று பாக்யராஜை மிரட்டி உதவி இயக்குனரான லிவிங்ஸ்டன்.. உண்மையை உடைத்த நடிகர்.?

தற்கொலை செய்து கொள்வேன் என்று பாக்யராஜை மிரட்டி உதவி இயக்குனரான லிவிங்ஸ்டன்.. உண்மையை உடைத்த நடிகர்.?



Acter Livingston viral interview

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகராக இருந்தவர் லிவிங்ஸ்டன். இவர் தமிழ் சினிமாவில் ஹீரோ, காமெடியன், வில்லன், குணச்சித்திர நடிகர் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்து தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.

Bakkiyaraj

மேலும் சில திரைப்படங்களில் திரை கதாசிரியராகவும், துணை இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறார் லிவிங்ஸ்டன். சமீபத்தில் இவர் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்பேட்டியில் பாக்யராஜிடம் துணை இயக்குனரான கதையை கூறியிருந்தார்.

அவர் கூறினார், "நான் சினிமா துறையில் ஆரம்ப உதவி இயக்குனராகவே விரும்பினேன். இதற்காக பாக்யராஜிடம் சென்று வாய்ப்பு கேட்டேன். அதற்கு நான் கூப்பிடும் வரை காத்திருங்கள்.

Bakkiyaraj
இதன் பின்பு சில வருடங்களுக்குப் பிறகு என் அப்பாவிற்கு சண்டை ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்றேன். கடைசியாக ஒரு தடவை பாக்யராஜ் சாரை சந்திக்க சென்றேன். அப்போது அழுது கொண்டே தற்கொலை செய்து கொள்ள போகிறேன். துணை இயக்குனர் வாய்ப்பை தருவீங்களா மாட்டீங்களா என்று கேட்டேன். அதன் பின்பு அவர் எனக்கு தைரியம் கூறி உதவி இயக்குனராக சேர்த்துக் கொண்டார். இவ்வாறு தான் சினிமாவில் காலடி எடுத்து வைத்தேன்" என்று கூறினார்.