எதிர்நீச்சல் சீரியல் நடிகையை காதலிக்கும் நடிகர் தனுஷ்.. வைரலாகி வரும் வீடியோவால் பரபரப்பு.?

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிரபலமான செயல்களில் ஒன்று எதிர்நீச்சல். டிஆர்பியில் மற்ற சீரியல்களை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்து வருகிறது. பிரபல சீரியல் இயக்குனரான திருச்செல்வம் இயக்கத்தில் எதிர்நீச்சல் ஒளிபரப்பப்பட்டு மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளது.
இந்த சீரியலில் ஆதிரை கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சத்யா தேவராஜன் இவர் முன்பு பல சீரியல்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் எதிர்நீச்சல் சீரியலின் மூலமாகவே மக்கள் மத்தியில் பிரபலமானவராக அறியப்பட்டு வருகிறார்.
இது போன்ற நிலையில், சில வருடங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது நடிகர் தனுஷ் விருந்தினராக வந்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் ஆதிரை தனுஷிடம் எந்த பெண்ணிடமாவது ப்ரோபோஸ் செய்யும்படி கேட்டார்.
இதற்கு தனுஷ் ஆதிரையிடமே பிரபோஸ் செய்தார். இந்த வீடியோ நீண்ட வருடங்களுக்குப் பிறகு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ஆதிரையின் ரசிகர்கள் கரிகாலனுக்கு துரோகம் பண்ணாதீங்க என்று கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.