பிக்பாஸ் அல்டிமேட்டில் வைல்ட் கார்டு என்ட்ரியா போறீங்களா! பிக்பாஸ் 5 பிரபலம் சொன்ன பதிலை பார்த்தீங்களா!!

பிக்பாஸ் அல்டிமேட்டில் வைல்ட் கார்டு என்ட்ரியா போறீங்களா! பிக்பாஸ் 5 பிரபலம் சொன்ன பதிலை பார்த்தீங்களா!!


abishiek-answer-to-wildcard-entry-in-bigboss-ultimate

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5  அண்மையில் முடிவுக்கு வந்தது. அந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு பெருமளவில் பிரபலமானவர் திரைப்பட விமர்சகர் அபிஷேக் ராஜா. அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது தன் மீது அனைவரின் கவனத்தையும் கொண்டுவர செய்த காரியங்கள் மூலம் அவர் பார்வையாளர்களின் விமர்சனத்திற்கு உள்ளானார். அதனை தொடர்ந்து அவர் நிகழ்ச்சி தொடங்கிய இரண்டாவது வாரமே எலிமினேட் ஆனார்.

பின்னர் நிகழ்ச்சி கொஞ்சம் போர் அடிக்கத் தொடங்கிய நிலையில் மீண்டும் விறுவிறுப்பை அதிகரிக்க அபிஷேக் மறுபடியும் வைல்ட் கார்டு என்ட்ரியில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். ஆனாலும் அவர் மறுபடியும் குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

பல சர்ச்சைகளை சந்தித்த அபிஷேக் அண்மையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்பொழுது நெட்டிசன் ஒருவர், பிக்பாஸ் அல்டிமேட்டில் வைல்டு செல்வதற்கு வாய்ப்பு இருக்கா? என கேட்டுள்ளார்.

Abisheik

அதற்கு அவர், ஆமா, இந்தவாட்டி சாக்கு மூட்டைல அனுப்பறாங்க. வெண்ணிலா (வனிதா) அக்கா உருட்டுகட்டையை கையில் வைத்துக்கொண்டு அத கிழிச்சி ஓப்பன் பண்ண கேட்பாங்க என்று பதிலளித்துள்ளார். இந்த நிலையில் அபிஷேக் உள்ளே சென்றால் கண்டிப்பாக அவருக்கும், வனிதாவிற்கும் மோதல் உருவாகும் எனவும் நெட்டிசன்கள் கூறுகின்றனர்.