பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபிராமி, முதல்வேலையாக என்ன காரியம் செய்துள்ளார் பார்த்தீர்களா.! - TamilSpark
TamilSpark Logo
சினிமா பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபிராமி, முதல்வேலையாக என்ன காரியம் செய்துள்ளார் பார்த்தீர்களா.!

 பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 50 நாட்கள் கடந்த நிலையில் மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன்,சாக்‌ஷி என 7 போட்டியாளர்கள் கடந்த நாட்களில் வெளியேற்றப்பட்டனர். அதனை தொடர்ந்து வைல்டுக்கு கார்டு எண்ட்ரியாக நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்கு வந்தார்.
 
பின்னர் விருந்தினராக வனிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அவர் வந்ததுமே தனது வேலையை துவங்கினார். போட்டியார்களை பற்றி குறை கூறினார் . பின்னர் முகேன் குறித்து அபிராமியிடம் தவறாக கூறியதை கூறியதை தொடர்ந்து அபிராமி மற்றும் முகேனுக்கு இடையே பெரும் பிரச்சினை வெடித்தது. கடந்த வாரம் முழுவதும் அதுவே  பெரும் பூதாகரமாக  மாறியது. பின்னர் ஒருசில காரணங்களால் மதுமிதா தற்கொலைக்கு முயற்சி செய்தது மேலும்  பரபரப்பை கிளப்பியது.

anbirami mugen fight க்கான பட முடிவு

இதனை தொடர்ந்து லாஸ்லியா,  கவின்,  முகேன் மற்றும் அபிராமி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில்,  குறைந்த வாக்குகளை பெற்று அபிராமி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபிராமி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வந்துவிட்டேன். பாரதி கண்ட புதுமை பெண்ணாக, நேர்கொண்ட பார்வையுடன் என  கமலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அதனுடன் எனக்கு ஆதரவு அளித்த குடும்பத்தினர் ரசிகர்கள் மற்றும் எனது ஆர்மி அனைவருக்கும் நன்றி. எனது கனவு நிறைவேறி விட்டது எனவும் பதிவிட்டுள்ளார்

 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo