சினிமா

விஜய்,சூர்யாவுடன் நடிக்கும் போது இந்த பிரபல நடிகைக்கு வெறும் 12 வயசுதானா?? நம்பவே முடியலையே! ஷாக்கான ரசிகர்கள்!!

Summary:

80 கால கட்டங்களில் தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் கதாநாயகியாகவும், குணச்சித்திர வேடங்க

80 கால கட்டங்களில் தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் கதாநாயகியாகவும், குணச்சித்திர வேடங்களிலும், கவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை அனுராதா. இவரது மகள் அபிநயஸ்ரீ. இவர் தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும் நடன இயக்குனராகவும் உள்ளார்.

அபிநயஸ்ரீ தமிழ் சினிமாவில் ரமேஷ்கண்ணா இயக்கத்தில் சூர்யா மற்றும் விஜய் இருவரும் இணைந்து நடித்து வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிரண்ட்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் அவர் நடிகை தேவயானியின் தங்கையாக, விஜய்யை ஒருதலையாக காதலித்து பின்னர் பிரச்சினைகள் ஏற்படுத்தும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ப்ரண்ட்ஸ் படத்தில் அபிநயஸ்ரீயின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

    

 அப்படத்தைத் தொடர்ந்து அவர் ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாகவும், பல படங்களுக்கு நடன இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த அவர் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அப்பொழுது அபிநயஸ்ரீ ப்ரண்ட்ஸ் படத்தில் நடிக்கும்போது எனக்கு 13 வயதுதான் ஆனது. வயதிற்கு வந்த 4, 5 மாதத்திலேயே அந்த படத்தில் நடித்தேன். அதனால் எனது அம்மா என்னை நடிக்க கூடாது என தடுத்தார். நான் தான் அடம்பிடித்து விஜயுடன் அந்த படத்தில் நடித்தேன் என்று கூறியுள்ளார்.


 


Advertisement