43 வயதிலும் குறையாத அழகு! இளமையாக இருக்கும் நடிகை சினேகாவின் டயட் சீக்ரெட் என்ன தெரியுமா?
பிரபல ஹிந்தி நடிகருக்கு மிகவும் பிடித்த தமிழ் பாடல் இதுதானாம்! எந்த படம் தெரியுமா?

இய்குனார் கவுதம் மேனன் இயக்கத்தில், ஹரிஷ் ஜெயராஜ் இசையில், மாதவன், ரீமாசென் நடித்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் மின்னலே. படம் வெற்றிபெற்றதை விட படத்தின் பாடல்கள் மாபெரும் வெற்றிபெற்றது. இன்றளவு வரை இந்த படத்தில் பலரது விருப்பமான பாடலாக உள்ளது.
அந்த வகையில் நெட்டிசன் ஒருவர் மாதவனின் மின்னலே என்ற பிளாக்பஸ்டர் படம் கடந்த 2001ல் இதே நாளில்(பிப்ரவரி 18ஆம் தேதி) வெளியானது. அப்போது எனக்கு 18 வயது தான் என சில எமோஷ்னலான வார்த்தைகளை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அந்த ட்விட்டுக்கு பிரபல ஹிந்தி நடிகர் அபிஷேக் பச்சன் பதில் டிவிட் அனுப்பியுள்ளார். அதில், ஒரு சமயம் ஊட்டியில் படப்பிடிப்பு நடந்தபோது பார்த்தேன். இன்னமும் இப்படத்தின் பாடல்களை கேட்கிறேன் என ட்விட் செய்து அந்த நெட்டிசனுக்கு ஷாக் கொடுத்தார்.
அபிஷேக் பச்சனின் இந்த டிவிட்டுக்கு மின்னலே படத்தின் இசை அமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜ் So sweet of you Mr.Abhishek என்று பதில் அளித்துள்ளார்.
Went and saw it in a movie theatre in Ooty where I was shooting at the time. Still listen to the songs.
— Abhishek Bachchan (@juniorbachchan) February 18, 2019
So sweet of you Mr.Abhishek
— Harris Jayaraj (@Jharrisjayaraj) February 18, 2019