மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
90'ஸ் கிட்ஸுக்கு சூப்பர் அப்டேட்.. அப்பாஸ் மீண்டும் என்ட்ரி.. எந்த படத்தில் தெரியுமா.?!

சாக்லேட் பாய்
கோலிவுட் திரையில் ஒரு கட்டத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். இவர் 90 காலகட்டங்களில் நடித்து அன்றைய கால இளம் ரசிகைகளில் கனவு நாயகனாக திகழ்ந்தவர். இவர் ஹீரோவாக மட்டுமல்லாமல் செகண்ட் ஹீரோவாக நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.
ரசிகர்களின் கனவு நாயகன்
பிரபல நடிகர்களான கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட நடிகர்களுடன் சேர்ந்து நடித்த இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கொடி கட்டி பறந்தார். இவரது இயல்பான நடிப்புக்கும், உடல்வாகுவிற்கும் இளம் ரசிகைகள் அதிகப்படியானோர் இருந்தனர்.
இதையும் படிங்க: வாரிசு நடிகருடன் அடுத்த கூட்டணி.?! லோகேஷின் புது படம் பற்றிய தகவல் லீக்.!
திசைமாறிய வாழ்வு
திடீரென இவருக்கு பட வாய்ப்புகள் குறைய துவங்கியது. அதன் பின் சினிமாவில் இருந்து மொத்தமாக காணாமல் போய்விட்டார். அடிக்கடி சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டு வரும் நிலையில், அவர் ஒரு பெட்ரோல் பங்கில் வெளிநாட்டில் வேலை செய்வதாக தகவல் வெளியாகியது. இது மிகப் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது.
வெப்சீரிஸில் என்ட்ரி
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் அப்பாஸ் மீண்டும் படங்களில் நடிக்க வருகிறார். சற்குணம் இயக்கும் வெப் தொடர் ஒன்றில் அப்பாஸ் நடிக்க அவருடன் அதிதீபாலன், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதனை புஷ்கர் காயத்ரி தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு, 'எக்ஸாம்' என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பட்டனை திறந்துபோட்டு, படு பயங்கர கவர்ச்சி.. கருப்பன் பட நடிகையால், அதிர்ந்து போன இணையவாசிகள்.!