வாரிசு நடிகருடன் அடுத்த கூட்டணி.?! லோகேஷின் புது படம் பற்றிய தகவல் லீக்.!



may lokesh kanagaraj next movie with dhanush

குறுகிய கால ஹீரோ

கோலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். மிகவும் குறிப்பிட்ட காலத்திலேயே தனக்கான பெயரையும், புகழையும் அவர் பெற்றுவிட்டார். தற்போது, ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் கூலி எனும் திரைப்படத்தை இயக்கி வருகின்றார். 

கைதி 2

இதனை தொடர்ந்து இவர் கைதி 2 திரைப்படத்தை இயக்கப் போவதாக சில தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் ஒரு புதிய படம் பற்றிய அப்டேட் வெளிவந்துள்ளது.

இதையும் படிங்க: "அஜித் சாரை வைத்து படம் இயக்கவேண்டும் என்று ஆசை.. ஆனால்" இயக்குநர் லோகேஷ் ஓபன் டாக்.!?

lokesh kanagaraj

தனுஷுடன் கூட்டணியா.?

கைதி 2 திரைப்படத்திற்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் தனுஷை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக உறுதியான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இது தனுஷ் மற்றும் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

LCU -வில் வருமா.?

மேலும் இவர்களது கூட்டணியில் வரவுள்ள திரைப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க இருக்கின்றது. எனவே, இந்த திரைப்படம் லோகேஷ் கனகராஜ் யுனிவர்சில் வரும் என்று எதிர்பார்ப்புகள் அதிகமாகி இருக்கிறது.

இதையும் படிங்க: தனுஷ் - அருண் விஜய் காம்போவில் இட்லி கடை; வெளியீடு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!