பிரபல நடிகையுடன் ஆர்யாவிற்கு திருமணம்! எப்பொழுது, அந்த நடிகை யார் தெரியுமா?

பிரபல நடிகையுடன் ஆர்யாவிற்கு திருமணம்! எப்பொழுது, அந்த நடிகை யார் தெரியுமா?



aarya-marry-to-sayisha

தமிழ் சினிமாவில் அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஆர்யா.அதனை தொடர்ந்து அவர்  பட்டியல், நான் கடவுள், மதராசபட்டணம், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், கடம்பன், கஜினிகாந்த் என்று பல படங்களில் நடித்துள்ளார். 

மேலும் அவருக்கு கடந்தஆண்டு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியின் மூலம் பெண் பார்க்கும் படலம் தொடங்கியது. இதில் 16 பெண்கள் பங்கேற்றநிலையில் இறுதியாக யாரேனும் ஒருவரை ஆர்யா தேர்வு செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் தற்போது யாரையும் திருமணம் செய்ய போவதில்லை எனக்கூறி அதிர்ச்சி கொடுத்தார்.

sayisha

இந்நிலையில் கஜினிகாந்த் படத்தில் நடித்ததன்மூலம் ஆர்யாவுக்கும் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை சாயி‌ஷாவுக்குமிடையே காதல் மலர்ந்ததாக கிசுகிசுக்கள் வெளிவந்தது.  இதற்கு இருவரும் மறுப்பு தெரிவிக்காத நிலையில் வருகிற மார்ச் மாதம் 10-ந் தேதி அவர்களுக்கு திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் ஐதராபாத்தில் இவர்களது திருமணம் விருப்பதாகவும், திருமண ஏற்பாடுகளில் ஆர்யாவும், சாயி‌ஷாவும் தீவிரமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.